பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
லோடு ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து... 2 பேர் பலி!!
உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள கள்ளிப்பாளையம் பிரிவு அருகே இன்று காலை 2 நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது எதிரே லோடுகளை ஏற்றுக் கொண்டு அதிவேகத்தில் டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் ஆனது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் உடுமலை அருகே உள்ள மறையூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயகுமார் என்பதும் மற்றோர் நபர் யார் என்பது தெரியவில்லை. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.