ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குடி போதையில் உல்லாச ரெய்டு: கள்ளக்காதல் ஜோடியினர் செய்த காரியத்தால் நேர்ந்த சோகம்..!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதியினரின் மகள் தரனேஸ்வரி (6). இவர் உசிலம்பட்டி பகுதியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.
இவர் நேற்று மாலை பள்ளியிலிருந்து அரசு பேருந்தில் தனது ஊருக்கு வந்துள்ளார். கருங்கல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் ஓட்டி வந்த பல்சர் பைக் சிறுமி தரனேஸ்வரி மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி தரனேஸ்வரி பலத்த காயமடைந்துள்ளார்.
எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தரனேஸ்வரிக்கு முகத்தில் 16 தையல் போட்டதுடன் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கூம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பல்சர் பைக்கை ஓட்டி வந்த பெண் வெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ரேவதி என்பதும் அவருடன் பைக்கில் வந்தது அவரது கள்ளக்காதலன் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லிங்கசாமி என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் மதுபோதையில் இருந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மது போதையில் கள்ளக்காதல் ஜோடி ஓட்டி வந்த பைக் மோதி சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது