மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரிதாபம்.. திமுக கொடிக்கம்பம் நட்டபோது இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி.!
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மணலி திருவள்ளுவர் தெருவில் நடைபெற இருந்துள்ளது.
இதனால் மணலி சின்ன சேக்காடு பகுதியில் கூலி வேலை செய்யும் எல்லப்பன் என்பவர் இன்று காலை மணலி பாடசாலை தெருவில் உள்ள இடைவிடா சகாய மாதா சர்ச் அருகே திமுக கொடிக்கம்பும் கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திமுக கொடி கட்டப்பட்டு சாலை ஓரத்தில் நடும்போது எதிர்பாராத விதமாக சாலையின் மேலே செல்லக்கூடிய மின்சார கம்பியில் கொடிக்கம்பம் பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் எல்லப்பனை மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு எல்லப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் எல்லப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த அசம்பாவிதத்தால் அப்பகுதியில் நடைபெற இருந்த உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.