மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக குளத்தில் குளிக்க சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!
சிவகங்கை மாவட்டம் கீழாயூர் வீரபத்ர சுவாமி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரியாஸ் அகமது. இவருக்கு சலீமத் ஆசிபா, அமீனா நஸ்ரின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல் மஜிதா என்ற மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் மூவரும் குளத்தில் குளிப்பதற்காக கீழாயூர் குளத்திற்கு சென்று உள்ளனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு மூவரும் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக குளத்தில் குதித்து மாணவியர் மூவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சலிமத் ஆசிபா மற்றும் நூருல் மஜிதா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் அமீனா நஸ்ரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.