மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் மரணமடைந்த தேவா என்பவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது இரங்கலை தெரிவிப்பதற்காக உறவினர்கள் அனைவரும் துக்க வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தேவாவின் உடல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாத தேவாவின் தம்பி பகவான் ஃப்ரீசர் பாக்ஸை தொட்டு அழுதுள்ளார். அப்போது பகவான் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் அருகில் நின்றிருந்த பெண்கள் மீதும் மின்சாரம் பாயந்துள்ளது. இதனையடுத்து மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுகாயம் அடைந்த 15ற்கும் மேற்பட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.