திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரையில் சோகம்.. கார் மோதி முதியவர் பலி..!
மதுரை மாவட்டம் கோ.புதூர் கற்பக நகர் பகுதியை சேர்ந்தவர் போஸ்(72). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட போஸ் படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.