திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சோகம்.. கண்மாயில் குளிக்க சென்ற தாய் மகள் நீரில் மூழ்கி பலி.!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள அழகமடை பகுதியை சேர்ந்த ராஜாராம் - ராஜேஸ்வரி தம்பதியினர் குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊருக்கு ராஜாராம் தனது குடும்பத்தினரோடு சென்றுள்ளார். அங்கு ராஜேஸ்வரி மற்றும் அவரது மகள் ஹன்சினி (12) வீட்டின் அருகிலுள்ள கண்மாயில் குளித்துவருவதாக ராஜாராமிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் கண்மாயில் குளித்து கொண்டிருந்த ஹன்சினி தீடிரென நீரில் மூழ்கி கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி தன் மகளை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தபோது ஆழம் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் குளிக்க சென்ற மனைவி மற்றும் மகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த ராஜாராம் கண்மாயில் சென்று பார்த்தபோது அவர்கள் கண்மாயில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.