மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெல்லை அருகே சோகம்.. தாயின் இறப்பை தாங்க முடியாமல் மகன் எடுத்த விபரீத முடிவு..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மணலோடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் ராசாமணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராசாமணியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ராசாமணி மனம் உடைந்து காணப்பட்டு வந்ததாகவும், குடும்பத்தார் அவருக்கு ஆறுதல் கூறி வந்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற ராசாமணி பின்னர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அவர் அம்பாசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி இடையிலான ரயில் தண்டவாள பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மேலும் இச்சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் ராசாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.