திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாய் வேலைக்கு சென்ற இடத்தில் மகனுக்கு நேர்ந்த விபரீதம்... பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.!
ஈரோடு மாவட்டத்தில் தாய் வேலைக்கு சென்ற இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி சிம்ரன். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் சையத் அத்னான் என்ற மகன் இருந்தான்.
சிம்ரன் அங்குள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை இரண்டாம் தேதி பணிக்கு செல்லும் போது தனது மகன் சையது அத்னானை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். தனது மகனை அருகில் இருந்த ஒரு தோட்டத்தில் விளையாட விட்டுவிட்டு வேலை செய்திருக்கிறார் சிம்ரன்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் கிடந்த பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை எடுத்து அதில் தண்ணீரை கலக்கி குடித்து விட்டான். இதனால் வயிற்று வலியால் துடித்த சிறுவனை உனது குடும்பத்தினர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு வைத்து சிறுவன் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.