செங்கல்பட்டில் நள்ளிரவில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்... தென் மாவட்ட ரயில்கள் தாமதம்!!



Train accident in chengalpattu

தூத்துக்குடியில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னை ஹார்பர் நோக்கி சென்ற சரக்கு ரயில் நள்ளிரவு நேரத்தில் செங்கல் பட்டு ரயில் கேட் அருகே வந்த போது அதிக பாரம் தாங்காமல் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து சரக்கு பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி தடம் புரண்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக மோதி ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். 

Chengalpattu

நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து சேவை இல்லை. ஆனால் தென் மாவட்டத்திலிருந்து 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் வர வேண்டி இருப்பதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது.