#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரயில் கட்டணம் உயருகிறதா? அதிர்ச்சி காரணம்!
இந்தியன் ரயில்வேயில் இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் கடந்த காலாண்டை விட வருவாய் குறைந்துள்ளது. பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும், சரக்கு கட்டணம் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.
இந்தநிலையில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், ரயில்வே நிா்வாகத்தின் வருவாய் குறைந்து வருகிறது. இதனால், பயணிகள் டிக்கெட் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் முறைப்படுத்த இருக்கிறோம். நீண்ட ஆலோசனைக்கு பிறகே இதுதொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.
சரக்கு ரயில் கட்டணம் ஏற்கெனவே அதிகமாக இருப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். இதனால் சாலைவழிப் போக்குவரத்தில் சரக்குகள் கொண்டு செல்லப்படுவதை சரக்கு ரயிலுக்கு மாற்றுவது தான் எங்கள் இலக்கு. இதனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
ஆனாலும், ரயில் கட்டணம் உயருமா? என்பது குறித்து நேரடியாக பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா். சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார்.