மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கையை வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலன்.. போலீசார் வலைவீச்சு.!
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கையை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை குன்றத்துறை சேர்ந்த திருநங்கை சுக்ரியா என்பவரை கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதில் கார்த்திக் தினமும் மது அருந்தி வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுக்ரியா கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் மதுப்பழக்கத்தை கைவிடும் படி காதலன் கார்த்திக்கிடம் சுக்ரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் சோமமங்கலம் அருகே வரதராஜபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நின்றிருந்த சுக்ரியாவை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சுக்ரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய திருநங்கையின் காதலன் கார்த்திகை தீவிரமாக தேடி வருகின்றனர்.