#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளி: போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நேரடியாக களத்தில் இறங்கும் அமைச்சர்!
சென்னையில் வாழும் 90 சதவிகித மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். இந்த உண்மை தமிழகத்தில் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தான் தெரியும்.
சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் அனைவரும் பண்டிகைகளை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால் தான். ஒரே நேரத்தில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பவதால் பண்டிகைக்கு முன் இரண்டு மூன்று நாட்களுக்கு சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
அதிலும் தீபாவளி இந்த வருடம் செவ்வாய்க்கிழமை வருவதால் இன்று வெள்ளிக்கிழமை இன்று துவங்கி அடுத்த நான்கு நாட்கள் நிச்சயம் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். இந்த சூழ்நிலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
1 . தீபாவளி பண்டிகைக்கு 22,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
2 . சென்னையில் இருந்து நவ.3,4,5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும்
3 . சென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
இதோடு மட்டுமல்லாமல் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரே நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்து சேவையை கண்காணிக்கப் போவதாக தெரிவித்தள்ளார். இது. குறித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,
"எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன் தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூரில் தீபாவளிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் - மாண்புமிகு அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர்."
எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான்
— AIADMK (@AIADMKOfficial) November 2, 2018
நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன்
தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூரில் தீபாவளிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்
- மாண்புமிகு அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர்.