திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மலக்குடலில் மறைத்து வைத்து ரூ.70 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவி.!
திருச்சி விமான நிலையத்திற்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவர் 410 கிராம் தங்கத்தை தன்னுடன் கடத்தி வந்தார். இதன் மதிப்புரூ.26.62 இலட்சம் ஆகும். கடந்த மார்ச் மாதம் சுங்கத்துறை அதிகாரிகளால் 410 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர் வருகைதந்தார். சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர் செயல்பட்ட காரணத்தால், அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அச்சமயம் அவர் தனது மலக்குடலில் 977 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.70.58 இலட்சம் ஆகும். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Based on intelligence, Officers of AIU, Trichy Airport seized 977 grams of 24K Gold valued at Rs 70.58 lakh extracted from 3 packets consisting of 1,081 grams of paste-like material concealed by the passenger in his rectum. The passenger traveled from Dubai to Trichy on… pic.twitter.com/qXpg1lXC0g
— ANI (@ANI) April 27, 2024