மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.3 இலட்சம் கடன் நிலுவைக்காக, தொழிலதிபரின் மகனை கடத்திய நிதி நிறுவன ஊழியர்கள்.. திருச்சியில் பகீர்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகர், 8 ஆவது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் ஹைதர் அலி (வயது 42). இவர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் 17 வயது மகனும், அவரின் உறவினர் மகனும் காரில் வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தனர்.
இவர்களின் கார் பறவை சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் காரை இடைமறித்து, ஹைதர் அலியின் மகனுடன் காரை எடுத்து சென்றுள்ளனர். அவருடன் வந்த மற்றொரு நபரை அங்கேயே விட்டுவிட்டு புறப்பட்டுள்ளனர். இதனால் பதறிப்போன நபர், ஹைதர் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு பதறிப்போன ஹைதர் அலி, திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வசியரினை நடத்தியுள்ளனர். விசாரணையில், ஹைதர் அலி தனியார் நிறுவனத்திடம் ரூ.6 இலட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்த தொகையில் ரூ.3 இலட்சம் செலுத்திவிட்டு நிலையில், மீதமுள்ள ரூ.3 இலட்சம் பணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி நிறுவனம் ஹைதர் அலியை தொந்தரவு செய்து வந்த நிலையில், ஹைதர் அலியின் காரை கடத்தி செல்ல நிதி நிறுவன ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவத்தின் போது ஹைதர் அலியின் மகனும் இருந்த நிலையில், அவரையும் சேர்த்து கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து, இருதரப்பிடமும் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கையில், ஹைதர் அலியின் மகன் தான் தங்களுடன் விருப்பப்பட்டு வந்தார் என தெரிவித்துள்ளது.