#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! சுஜித் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை!! திருச்சி மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த சுஜித் என்ற 2வயது குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை 25ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள் நடைபெற்றது.
மேலும் தமிழக மக்கள் அனைவரும் சுஜித் உயிரோடு மீண்டுவரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட நிலையில் குழந்தை உயிரிழந்திருந்த நிலையில் 29 ம் தேதி அதிகாலை, உடல் மோசமாக சிதைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்படவில்லை என தகவல்கள் பரவி வந்தது. இதற்கிடையில் சுஜித்தின் பெற்றோர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் வழங்கபடும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 10 லட்சத்திற்கான காசோலையை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ் சிவராசு அவர்கள் இன்று சுஜித்தின் பெற்றோரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்படவே இல்லை என பலரும் வதந்தியை பரப்பி வருகின்றனர். ஆனால் அவரது உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என கூறியுள்ளார். மேலும் சுஜித்தின் குடும்பத்தினர் அரசு வேலை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.