திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருச்சியில் அதிர்ச்சி... மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை... வெளியான உண்மை காரணம்.!
திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்த நபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி, அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் கணேஷ். 34 வயதான இவர் திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கி இருப்பதாக தெரிகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர் வாந்தி எடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி விசாரித்த போது மன உளைச்சலில் எலி மருந்தை சாப்பிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக கணேஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.