மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக நிர்வாகி நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை; துவாக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.!
சாப்பாடு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்த அதிமுக நிர்வாகி மர்ம குமப்பால் கொல்லப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 32). இவர் அதிமுக நிர்வாகி ஆவார். நேற்று இரவில் துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள உணவகத்தில் உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் சிறுது நேரம் கழிந்து உணவை வாங்க செல்கையில், 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கோபியை இடைமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இவர்ளிடம் இருந்து கோபி தப்பிக்க முயற்சித்து ஓடினாலும் பலனில்லை. நடுரோட்டில் கதறக்கதற கொலை சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த துவாக்குடி காவல் துறையினர், கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.