மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமியை காதலில் வீழ்த்தி, ஊர்ஊராக கடத்தி பாலியல் பலாத்காரம்.. காதல் ஆசைவார்த்தையில் விபரீதம்.!
8ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை காதலில் வீழ்த்தி கடத்தி பலாத்காரம் செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவ ஈர்ப்பை அறிந்துகொள்ள இயலாமல் சிறுவயதில் சிறுமி அனுபவித்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பேரூராட்சியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தவாறு தண்டலைப்புதூரில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வருவது இயல்பு என்று கூறப்படுகிறது.
இவரை பின்தொடர்ந்து சென்ற தொட்டியம் கிராமத்தை சேர்ந்த சங்கீத் (வயது 21) என்பவர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். காதல் வலையில் வீழ்ந்த சிறுமியிடம் கயவன் ஆசைவார்த்தை பேசி, அவர் தனியாக வீட்டில் இருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை சேலம் கொண்டலாம்பட்டியில் பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டில் தங்கவைத்து, அங்கிருக்கும் பள்ளியில் படிக்க சேர்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சங்கீத் சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
அவரை பல மாவட்டங்களுக்கு அழைத்து சென்று விடுதியில் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியை கடத்தி சென்ற சங்கீத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீத்தின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.