மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்ச பிள்ளையை சீரழிச்சிடீங்களேடா.. காதல் பெயரில் சிறுமியை சூறையாடிய 3 பேர்.. திருச்சியில் பேரதிர்ச்சி சம்பவம்..!
விபரமறியா வயதில் காதல் வலையில் சிறுமியை திட்டமிட்டு வீழ்த்திய 3 பேர், வெவ்வேறு தருணங்களில் அவரிடம் அத்துமீறிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. குடும்ப நிலையை உணர்ந்து படிக்க வேண்டிய பருவத்தில், 7 மாத கர்ப்பிணியாக காப்பகத்தில் சேர்க்கப்படவுள்ள சிறுமியின் கண்ணீர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதரன் - காமாட்சி (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த சில வருடத்திற்குள்ளாகவே ஸ்ரீதரன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்ற நிலையில், காமாட்சி குழந்தைகளை அக்கம் பக்கத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் மூத்த மகளுக்கு திருமணம் செய்துவைத்த நிலையில், அவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் 15 வயது மகளுடன் காமாட்சி இருந்து வந்துள்ளார். காமாட்சி 8 ஆம் வகுப்பு வரை பயின்ற நிலையில், கொரோனாவுக்கு பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றதும், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அப்பகுதி இளைஞர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
அவ்வப்போது சிறுமி கடைக்கு வந்து செல்லும் சமயத்தில் அவரை கவனித்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் அப்பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 21) என்ற வாலிபர் சிறுமிக்கு காதல் வலை வீசி இருக்கிறார். ரத்தினவேல் டிப்ளோமா பட்டதாரி வாலிபர் ஆவார். இவரது வலையில் விழுந்த சிறுமியை ரத்தினவேல் வீட்டின் குளியலறை மற்றும் காவேரி ஆற்றங்கரையோரம் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இவர்களிடையே பின்னாளில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சிறுமியை ரத்தினவேல் பிரிந்து சென்றுள்ளார்.கடந்த 2021 மார்ச் மாதத்தில் துளையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு (வயது 21) என்பவர், சிறுமிக்கு காதல் வலை விரித்த நிலையில், சிறுமியை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், பருவ வயதில் செய்வதறியாது சிறுமி இருந்துள்ளார்.
இதற்கிடக்கையில், தொட்டியம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டருகே உள்ள பந்தல் கடையில் சிறுவன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார்.
மகளின் உடல்நலம் சரியில்லை என்று கருதிய தாய், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்ற போது கர்ப்பமான விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து, இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் விசாரணை செய்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக சிறுமி உள்ள நிலையில், அவரை காப்பகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். தலைமறைவான பாபுவுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்தப்படவேண்டும். சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதால், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய வாய்ப்பில்லை என்பதால், அவரின் பிரசவத்திற்கு பின்னர் மரபணு சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மனைவி, மகள்களை பிரிந்து சென்ற தந்தையால், வீட்டில் தனியே மகள்கள் இருக்க, விபரம் புரியா வயதில் தாய் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் என்ற புரிதல் இல்லாமல் காதல் மாயையில் வீழ்ந்த சிறுமியை 3 பேர் சீரழித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.