மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாலியா இருக்கலாம் வா.. மனைவியை ஓரமாக அழைத்து கல்லைப்போட்டு கொன்ற கணவன்; சந்தேக நோயால் வெறிச்செயல்.!
திருச்சியில் உள்ள பொன்மலை, பொன்னேரிபுரம் பகுதியைச் சார்ந்தவர் சயினா பீவி (வயது 35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.
காதலன் இந்து என்பதால் அவர் விருப்பப்படி இந்துவாக மாறி திருமணம் செய்து பின் அவர் நிஷாவாக மாறி இருக்கிறார். இவர்கள் இருவரின் ஒற்றுமைக்கு சாட்சியாக இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.
பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த சதீஷ்குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்புடன் கவனித்து வந்துள்ளார். நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் பொறுப்பற்று இருக்கவே, வாழ்க்கையில் விரட்டி அடைந்த நிஷா கணவரிடம் அன்பாக இருக்காமல் விலகத் தொடங்கியுள்ளார்.
இந்த மாற்றத்தை சதீஷ் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், தனது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக எண்ணி உள்ளார். சம்பவத்தன்று சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மனைவியை பொன்மலை பகுதிக்கு அழைத்து வந்த அவர், நீ யாருடன் தொடர்பில் இருக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.
நிஷாவோ காதலித்தவனை கணவன் என்று நினைத்திருக்கிறேன் என்று அவரும் கூற, ஏற்றுக் கொள்ளாத சதீஷ் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். நீண்ட நேரம் ஆகியும் நிஷா வீட்டிற்கு வராததால், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடந்த போது கொலை அம்பலமானது.
தாயும் உயிரிழந்துவிட, தந்தையும் கைது செய்யப்பட்டதால் அவரின் குழந்தைகள் பரிதவித்து வருகின்றன.