கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வீட்டில் அந்த மாதிரி சத்தம்.. 3 இளம்பெண்களுடன்., ரைடு போன அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பகீர் சம்பவம்.!
3 இளம்பெண்களை வைத்து திருச்சியில் விபச்சாரம் நடத்தி வந்த கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் கோவர்த்தன கார்டன் பகுதியில் விபச்சார தொழில் நடைபெற்று வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக திருச்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனையில், கே.கே நகரை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 47), அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூரை சார்ந்த மணிகண்டன் (வயது 34) ஆகியோர் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வருவது உறுதியானது. விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியை சார்ந்த சினேகா (வயது 21), தேனியை சேர்ந்த ப்ரியா (வயது 24), நாமக்கல்லை சேர்ந்த சுதா (வயது 33) பெண்களும் மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர், விபச்சார தொழிலை நடத்தி வந்த வைத்தியநாதன் மற்றும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.