வடமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த சிறார்கள் திருச்சியில் மீட்பு.!



Trichy Railway Police Rescue Child Labor Arrived form North India

18 வயது நிரம்பாத சிறுவர்கள் வேலைக்காக திருச்சி வந்த நிலையில், அவர்களை இரயில்வே காவல் துறையினர் மீட்டனர். 

திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்திற்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் வேலைக்காக திருச்சிக்கு இரயில் மூலமாக வருகை தந்துள்ளனர். வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களை கவனித்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை செய்ததில் சிறுவர்கள் வேலைக்கு வந்தது அம்பலமானது. 

இதனையடுத்து, திருச்சி இரயில்வே சந்திப்பிலேயே சிறுவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சட்டப்படி 14 வயதை கடந்தால் எங்கும் பணிகளை செய்ய இயலும் என்று அறிவுரை கூறினர். மேலும், 14 வயதுக்கு கீழ் இருந்த சிறார்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

trichy

வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களில், சிறார்களும் 20 % நபர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மறுக்க இயலாத உண்மை. கட்டுமான பணிகளில் இருந்து சாலையோரம் உள்ள உணவகம் வரை ஒப்பந்த அடிப்படையில், போலியான வயது ஆவணம் மூலமாக அவர்கள் பணியில் அமர்த்தப்படுவது தான் உண்மை ஆகும்.