மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் பயங்கரம்... பிரபல ரவுடி கழுத்தறுத்த படுகொலை... பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையா.?
திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடி தனது நண்பர்களால் தலையை துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
பிரபல ரவுடி கழுத்து வெட்டி சுந்தர்ராஜ்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையைக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் மீது திருச்சி மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தனது எதிரிகளை தாக்கும் போது முதலில் கழுத்தில் வெட்டுவார். இதன் காரணமாக நண்பர்களால் கழுத்து வெட்டி சுந்தர்ராஜ் என அழைக்கப்பட்டு வந்தார்.
கழுத்தறுத்து படுகொலை
செய்யப்பட்ட சுந்தர்ராஜ் நேற்று காலை சுந்தர்ராஜின் சித்தப்பா மணி என்பவர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று இருக்கிறார். அப்போது சுந்தர்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுந்தர்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கதறிய கள்ளக்காதல் ஜோடி... பதறிய கணவன்... அட்வைஸ் கூறி அனுப்பி வைத்த காவல்துறை.!!
பழிவாங்க நடத்தப்பட்ட கொலை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பழி வாங்க நடத்தப்பட்ட கொலை என தெரிய வந்திருக்கிறது. கடந்த 2022 ஆம் வருடம் சுந்தர்ராஜ் தனது நண்பர்களுடன் ஜெயபால் என்பவரை கொலை செய்திருக்கிறார். அதற்கு பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் சுந்தர்ராஜின் தலைவெட்டும் பாணியிலேயே எதிரிகள் அவரையும் கொலை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் திருச்சி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!