திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் திருமணம் செய்த 22 வயது இளம்பெண் கழுத்து இறுக்கி கொலை; முகமெல்லாம் காயம்... திருச்சியில் பதறவைக்கும் சம்பவம்.!
திருச்சி மாவட்டத்திலுள்ள தேவரப்பம்பட்டி வனப்பகுதியில், முட்புறத்தில் இளம்பெண் சடலம் இருந்தது. தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
பெண்ணின் வாய், கழுத்தில் துப்பட்டா கட்டப்பட்டு இருந்த நிலையில், லேசான காயமும் இருந்தது. உடல் அருகே பெண்களின் உடைகள், அழகு பொருட்கள், வங்கிக்காசோலை புத்தகமும் இருந்தது.
இதனைவைத்து விசாரித்தபோது பெண்மணி தா.பேட்டையை சேர்ந்த பிரியங்கா (வயது 22) என்பது உறுதியானது. இவர் கடந்த ஆண்டு தான் காதலித்து வந்த சீனுபிரசாத் (வயது 24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார் என்ற தகவலும் தெரியவந்தது.
இதனால் பிரியங்காவை கொலை செய்தது யார்? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.