மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னோட Power தெரியாம விளையாடாதீங்க.. News Channels Vs YouTubers எச்சரிக்கை விடுத்த TTF வாசன்.!
2 கே கிட்ஸ்களிடம் பைக்கர் நாயகனாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர் டி.டி.எப் வாசன். இவரை இன்றுள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் தெரியாமல் இல்லை. பைக்கில் தான் செல்லும் இடங்களில் நடைபெறும் விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு வந்த வாசனுக்கு என தனி ரசிகர் பட்டாளமே பின்னாளில் உருவானது.
இவர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று, தனது வழிப்பயணத்தில் எடுக்கப்படும் விடியோவை சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். இவர் வைத்துள்ள விலையுயர்ந்த பைக்கில் பல சாகசமும் செய்து வருகிறார்.
இவரின் செய்கைகள் பல இளம் சிறார்களிடையே பைக் சாகசம் குறித்த ஆசையை ஏற்படுத்திவிடுகிறது. வாசனின் செயலை கண்டிக்கும் பல சமூக ஆர்வலர்களும், அவரின் சாகசத்தை எதற்காக பொதுவெளிகளில் வெளியிடுகிறார்?. அவரின் செயல்கள் குழந்தைகளிடையே ஆசையை தூண்டி, அவர்கள் விபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு?.
தங்கம், செல்லம் என காண்போரிடம் எளிய முறையில் பேசி அன்பாக பழகுவது, உதவுவது பாராட்டுதலுக்குரியது என்றாலும், அவரின் வீரதீர சாகசங்கள் எத்தகைய தாக்கத்தை என்பது அவருக்கு தெரியாதா? அல்லது அலட்சியமா? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்த டி.டி.எப் வாசன் இதனையும் வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். அதற்கு முன்பு அதிவேகத்தில் சென்று வெளியிட்ட புகைப்படத்தால் வழக்கை சந்தித்தார். இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில், டி.டி.எப் வாசன் ஊடகங்களை கண்டித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "டி.டி.எப் பவர் தெரியாமல் செய்தி சேனல்கள் விலையிடுகிறீர்கள் என்று கேட்கலாம் என்று தோணுகிறது. ஆனால், நான் அதனை கேட்கபோவது இல்லை. அனைத்திற்க்கும் எல்லை உள்ளது. நீங்கள் அதனை கடந்து செல்கிறது.
இவ்வாறே சென்றால் நீங்கள் செய்யும் வேலையை யூடியூபர்கள் அனைவரும் பேசுவோம். பிற யூடியூபர்களும் கவனமாக இருங்கள். நாம் கஷ்டப்பட்டு உழைப்பைப்போட்டு இந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்துள்ளோம். Views-க்காக அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். என் அன்பு நண்பர்களே விடியோவை ஷேர் பண்ணுங்க. விடியோவை பதிவு செய்தால் அதோடு லிங்கையும் பதிவிடுங்கள்" என்று கூறுகிறார்.
செய்தி சேனல்கள் வரும் செய்தியை மட்டுமே பதிவு செய்யும் தருணத்தில், டி.டி.எப்-பை உண்மையில் வைத்து செய்தது அவரை ட்ரோல் செய்யும் யூடியூபிகள் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. Views-க்காக லிங்க் பதிவிட்டு ஷேர் செய்ய கூறும் இந்த உள்ளம் தான் செய்தி நிறுவனங்களை கண்டிக்கிறதா? என விபரம் தெரிந்தவர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.