ஒரேகல்லில் 9 மாங்காய் அடிக்க ஆசைப்பட்டு வசமாக சிக்கிய டிடிஎப்.. சுத்துப்போட்ட போலீஸ்., 90 கிட்ஸ்க்கு மாபெரும் வெற்றி?..!



ttf-vasan-issue

கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வாசன். இவரை யூடியூபர் டி.டி.எப் வாசன் என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். இவர் அதிவேகத்தில் பைக் ஓட்டி வீலிங் செய்வது என்று தனது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய தொடங்கி பின்னாளில் பிரபலமானவர். 

அதனைத்தொடர்ந்து, இவருக்கு கிடைத்த வரவேற்ப்பால் தற்போது YouTube-இல் 20 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை கொண்டுள்ளார். வாடிக்கையாளர்கள் மூலமாக கிடைத்த வருவாயை கொண்டு 11 லட்சம் ரூபாய் பைக், 35 ஆயிரம் மதிப்புள்ள கேமராவுடன் வாசன் செய்த பல வீடியோக்கள் அவரின் ரசிகர்களுக்கு பிடித்தன. 

பைக்கில் செல்லும் போது காண்போர்களை தங்கம், சாமி என்று அன்போடு அழைத்து கனிவாக பேசியதால் கூடுதல் வரவேற்பு கிடைத்தது  அவரின் ரசிகர்களை வைத்து வியாபார யுக்தியை பெருக்க நினைக்கும் நிறுவனங்கள், தங்களின் நிறுவனம் சார்பாக வாசனை நேரில் அழைத்து பொருளை விளம்பரம் செய்வது வழக்கம். 

இந்நிலையில், கோவையில் இருக்கும் உணவகத்திற்கு வந்திருந்த டி.டி.எப் வாசனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய, மாஸ்டர் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் எடுத்த செல்பி டெக்னீகை வாசன் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் தனது வாகனத்தில் அதிவேகத்தில் பயணம் செய்ததற்கான அத்தாட்ச்சியாக உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்தார். 

இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு பல ஆன்லைன் புகார்கள் வந்துள்ளன. காவல் துறையினரும் புகாரை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிக்கவே, விரைவில் டி.டி.எப் வாசன் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 90 கிட்ஸ்க்கு கிடைத்த வெற்றி என சமூக வலைத்தளங்களில் மேற்கூறிய விசய கலாய்க்கப்பட்டு வருகிறது.