மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 மாதம் லிவிங் டூ கெதர்.. அப்புறம் தான் அது.. திடீரென TTF வாசன் எடுத்த முடிவு.!
40 நாட்கள் சிறையிலிருந்த டி.டி. எஃப் வாசனுக்கு நீதிமன்றம் ஒரு சில தினங்களுக்கு முன்னால் தான் ஜாமீன் வழங்கியிருக்கிறது. பல நாட்களுக்கு பின்னர் சமூக வலைதள பக்கத்தில் தலை காட்டிய டி.டி.எஃப் வாசன், ஒரு சர்ச்சையான விஷயத்தை தெரிவித்தார். அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வெகுநாட்கள் சென்ற பின்னர் நேரலையில் வந்த டி.டி.எஃப் வாசனிடம் பலரும் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர், 40 நாட்கள் சிறைவாசம் பல அனுபவத்தை கொடுத்தது. ஆனாலும் சிறை வாழ்க்கையில் தனக்கு திருமண ஆசை வந்துவிட்டது. கனவு கார் வாங்கிக்கொண்டு, வாழ்க்கையில் நான் நினைத்த ஒரு இடத்திற்கு வந்துவிட்டு, பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்குள் பல கனவுகள் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து திருமண ஆசை வந்துவிட்டது.
தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன். அதுவும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன். 3 மாதம் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு திருமணம் செய்ய வேண்டும். ஏனென்றால், வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை பார்த்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு முன்னரே டி.டி.எஃப்.வாசன் செய்த பல்வேறு செயல்களால் நீதிமன்றம் கடும் கோபத்திலிருந்தது. இதன் காரணமாக, அவருடைய வாகனத்தை எரிக்க வேண்டும் என்றும், அவருடைய யூடியூப் தளத்தை முடக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர், தற்போது செய்யும் அலப்பறைகள் காவல்துறையினரை சற்று முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தற்சமயம் அவர் பேசிய இந்த லிவிங் டுகெதர் தொடர்பான விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.