#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டியூஷன் படிக்க சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் புதுக்கோட்டை கூடல் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மவுண்ட் சீயோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியின் பெற்றோர் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.