கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கோவில் பத்து கிராமத்தில் லூர்து பிரான்சிஸ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மணல் கொள்ளையை மிகத் தீவிரமாக தடுத்து வந்தார்.
இதனால், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் லூர்து பிரான்சிஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது. அங்கு வந்த 2 பேர் விஏஓ லூர்து பிரான்சிஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஈடுபட்டதாக மாரிமுத்து மற்றும் ராமசுப்பு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 3000 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.