சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபட்ட.. இரண்டு தொழிலாளர்கள் மண் சரிந்து விழுந்து பலி...!



Two workers who were working on the underground sewer project in Chatur were killed by a landslide.

சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

சாத்தூரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. இதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட வேலைக்காக குழி தோண்டும் வேலையை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் செய்து கொண்டிருந்தனர். குழி தோண்டும் போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டது . 

அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (40), கிருஷ்ண மூர்த்தி (50) இருவரரும் வேலை செய்து கொண்டு இருந்தனர். மண் சரிந்து விழுந்ததில் இருவரும் குழிக்குள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அருகிலுருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள், ஜேசிபி  உதவியுடன் சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டவுன் காவல்துறையினர், மண்ணில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் உடலையும் உடற்கூறு ‌ஆய்விற்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.