பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
உதயநிதி அண்ணா.. ஆன்லைன் வகுப்புக்கு உதவி செய்யுங்க.! மறுநாளே மாணவியின் வீட்டிற்கு சென்று டேப் வாங்கி கொடுத்த உதயநிதி.!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் தொகுதியின் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது, தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்வது என தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தலுக்குப் பிறகு சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும்கூட சேப்பாக்கத்தில் நாள்தோறும் தொகுதி மக்களுடைய குறைகளைத் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தநிலையில், திருவல்லிக்கேணி,கந்தப்பன் தெரு பகுதியைச்சேர்ந்த சீனிவாசன்-சோனியா தம்பதி மகள் சுவலட்சுமி தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்புக்காக நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கியுள்ளார்.
திருவல்லிக்கேணி,கந்தப்பன் தெரு பகுதியைச்சேர்ந்த சீனிவாசன்-சோனியா தம்பதி மகள் சுவலட்சுமி தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்புக்காக நேற்று என்னிடம் வழங்கினார். தனது ஆன்லைன் கல்விக்கு உதவுமாறு அவர் கூறிய நிலையில், தங்கையின் வீட்டுக்கு சென்று TAB பரிசளித்தேன். அவருக்கு வாழ்த்துகள். pic.twitter.com/XPv7EyJRbu
— Udhay (@Udhaystalin) June 26, 2021
அப்போது அந்த சிறுமி தனது வீட்டில் கணினி இல்லாததால் ஆன்லைனில் கல்வி கற்கச் சிரமப்படுவதாகவும் இதனால் தான் கல்வி கற்க உதவ வேண்டும் என்றும் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து மறுநாளே அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி மாணவி சுவலட்சுமி கல்வி கற்க உதவியாக டேப் ஒன்றை அளித்தார். நன்றாகப் படிக்குமாறும் அந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், தங்கையின் வீட்டுக்கு சென்று TAB பரிசளித்தேன். அவருக்கு வாழ்த்துகள் என பகிர்ந்துள்ளார்.