#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி.! துவக்கிவைத்தார் உதயநிதி.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் பாதிப்பு உச்சத்திற்கு சென்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டநிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் தொகுதியின் பல பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி முகாம்களில் கலந்துகொண்டு தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்குப் பிறகு சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும்கூட சேப்பாக்கத்தில் நாள்தோறும் தொகுதி மக்களுடைய குறைகளைத் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
எழும்பூர் தொகுதி, புரசைவாக்கம் லட்சுமி மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். தொற்றை ஒழிப்பதற்காக தடுப்பூசியிட்டுக் கொண்ட அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்.@PKSekarbabu @iparanthamen pic.twitter.com/bBPwxDBeaU
— Udhay (@Udhaystalin) June 28, 2021
இந்தநிலையில், எழும்பூர் தொகுதி, புரசைவாக்கம் லட்சுமி மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று துவக்கிவைத்தார் உதயநிதி. இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், எழும்பூர் தொகுதி, புரசைவாக்கம் லட்சுமி மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். தொற்றை ஒழிப்பதற்காக தடுப்பூசியிட்டுக் கொண்ட அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும். என குறிப்பிட்டுள்ளார்.