தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கஜா புயலால் பாதித்த மக்களின் கண்ணீரை துடைத்த உதயநிதி ஸ்டாலின்!.
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கறம்பக்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை வந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களும், தி.மு.க.வினரும் திரளாக கூடினார்கள்.