மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலூர் தொகுதியை மிரளவைக்கும் கதிர் ஆனந்த்!! அவருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் திமுக கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தொகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியில் பெரிய தலைகளின் ஆதரவுடன் வேலூர் தொகுதியில் களமிறங்கும் கதிர் ஆனந்திற்கு ஏற்கனவே அந்த தொகுதி மக்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது.
எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது முதல் வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது என அவரது சேவைகள் நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உண்டு. தொகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதிலும் கதிர் ஆனந்த் சிறப்பான பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், "பள்ளி, கல்லூரி தொடங்கி அரசியலிலும் நான் கதிர் ஆனந்திற்கு ஜுனியர் தான். திமுக இளைஞர் அணி தலைவர் என்ற முறையிலோ அல்லது அமைச்சர் என்ற முறையிலோ நான் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக இங்கு வரவில்லை, மாறாக அவரது நண்பர் என்ற முறையில் அவருக்காக வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளதாக பேசினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்தை வெற்றிபெற செய்து, கதிர் ஆனந்த் எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்கவைக்க வேண்டும் எனவும் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளார்".