மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்டிமெண்டால் தாக்கும் உதயநிதி.. இப்போது மட்டும் என் தாத்தா கருணாநிதி இருந்திருந்தால்!
தேர்தலை முன்னிட்டு வாக்குசேகரிப்பில் இறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்டிமெண்டாக பேசி மக்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர், திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தீவிர பிரச்சாரத்திலும் இறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின், தொகுதி மக்கள் தன்னை நன்றாக வரவேற்பதாகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டாயம் நான் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை கூறியே மக்களிடம் வாக்கு சேகரித்து வருவதாகவும், இந்த நேரத்தில் மட்டும் என் தாத்தா கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றும் கூறி, மக்களை சென்டிமெண்டாக தாக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.