பலரும் அளித்த நிவாரணத்தொகையை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.! தொகை எவ்வளவு தெரியுமா.?
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் தொகுதியின் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை உதயநிதியிடம் கொடுத்து உதவினர். மேலும் நிவாரண நிதிக்கு பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்த தொகையை உதயநிதி முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் என்னிடம் அளித்த ரூ.31 லட்சத்து 60 ஆயிரத்து 201-ஐ தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இன்று ஒப்படைத்தேன். pic.twitter.com/2KS7sY2kUr
— Udhay (@Udhaystalin) June 2, 2021
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் என்னிடம் அளித்த ரூ.31 லட்சத்து 60 ஆயிரத்து 201-ஐ தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இன்று ஒப்படைத்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.