மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் மர்ம நபர் செய்த வேலையால் கதிகலங்கிய மக்கள்!!
நெல்லையில் உள்ள வீரநல்லூர் டேவிட் என்பவர் உணவகம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மர்ம நபர் ஒருவர் அவரது உணவகத்தின் மேற்கூரைக்கு தீ வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் வீடுகளில் வெளியே நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோலை எடுத்து, எடுத்த வாகனத்தின் மீதே ஊற்றி வைத்து எரித்துள்ளார்.
பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த மர்ம நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களை கதி கலங்க வைத்துள்ளது.
பின்னர், இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.