என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
மர்ம நபர் ரயிலில் அடிபட்டு மரணம்.. 'ஆர்பிவி' என டாட்டூ.. திருச்சி அருகே சோகம்.!

அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று திருவானைக்காவல் ரயில் பாலம் அருகில் கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் ரயில்வே பாலத்திற்கு அருகில் ஒரு நபர் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் சென்று அங்கே பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் பிணமாக கிடந்துள்ளார். அவரது இரு கால்களும் துண்டாகிய நிலையில் உயிர்பிரிந்துள்ளது.
அவரின் கையில், "RBV" என்று டாட்டு குத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த உடலை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலரின் வாகனத்தில் அரசுப்பேருந்து மோதி சோகம்; திருச்சியில் துயரம்.. ஆயுதப்படை காவலர் பலி.!
இது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் இறந்தவரின் டாட்டூ பற்றிய அடையாளம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என தொலைபேசி எண்களை போலீசார் கொடுத்துள்ளனர்.
94434 72524, 86672 59844
அவை,
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு, மரக்கிளையில் காத்திருந்த எமன்; நொடியில் சோகம்.!