#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனியாக இருந்த பெண்ணின் வாயை பொத்தி மர்ம நபர்கள் செய்த கொடூர சம்பவம்!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சுக்வால் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில், தற்போது திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் கீதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கீதா வீட்டில் தனியாக இருந்தபோது, திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக மர்ம நபர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர்.
அவர்களை வரவேற்ற கீதா, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் அளிக்காமல், திடீரென கீதாவை தாக்கி, வாயில் துணியை வைத்து, கை கால்களை கட்டி வைத்தனர். இதனால் கீதா மயக்கமானார்.
அதன் பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து 8 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். மயக்கம் தெளிந்த பிறகு கீதா எழுந்து சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரது கை, கால்களில் இருந்த கட்டுக்களை அவிழ்த்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து தனியாக இருந்த பெண்ணை கட்டி வைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.