மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: வடபழனி நிதிநிறுவன கொள்ளையில் அடுத்த குற்றவாளி கைது.. கல்லூரி மாணவர்கள் கொள்ளையர்களான பகீர் தகவல்.!
நிதிநிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட 7 குற்றவாளிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள் கொள்ளையர்களான பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் உள்ள வடபழனியில் செயல்பட்டு வரும் ஹோசியானி கேபிடல் என்ற நிதிநிறுவனத்தில், 7 பேர் கும்பல் ரூ.30 இலட்சம் பணத்தை கத்தி முனையில் கொள்ளையடித்து சென்றது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வடபழனி காவல் துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர். சம்பவம் நடந்த நாளிலேயே ரியாஸ் என்ற கல்லூரி மாணவனை விரட்டி சென்று கைது செய்தனர்.
இவனிடம் நடந்த விசாரணையின் பேரில் கல்லூரி மாணவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியான நிலையில், தற்போது கிஷோர் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறார். பிற கொள்ளையர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.