மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வண்டலூரில் திமுக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரம்; குற்றவாளிகள் 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரண்.!
சென்னையில் உள்ள தாம்பரம், வண்டலூர் பகுதியில் வசித்து வந்த திமுக பிரமுகர் ஆராவமுதன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி வெட்டிக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது. இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆராவமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ், அருண் ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.