மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விதவை பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஏஓ கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். தற்போது அவர் தனது 11 வயது மகனுடன் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித்தொகை வழங்கக்கோரி நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழ் வழங்க ஆரோக்கியதாஸ் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் 3000 ரூபாய் கொடுத்து இறப்பு சான்றிதழை வாங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தனியாக வர வேண்டுமென்று அழைத்துள்ளார். அப்போது விதவை சான்றிதழ் வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து செல்போனில் பேசிய ஆதாரங்களை வைத்து அந்த பெண் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆரோக்கியதாசை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.