காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
#Breaking: இளம்பெண்ணை ஏமாற்றியதாக., விசிக பிரமுகர், பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது பிசிஆர் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் கைது?.!
கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் விக்ரமன் தன்னை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண்மணி பதிவிட்டிருந்த நிலையில், அவர் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு.,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித்தொடர்பாளர் விக்ரமன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அறம் வெல்லும் என்ற நிலைப்பாட்டினை எடுத்து மக்களிடையே பிரபலமானார்.
இவரின் மீது கடந்த ஜூலை மாதம் இலண்டனில் உயர்படிப்பை மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் பெண்மணி வடபழனி காவல் நிலையத்தில் தன்னை காதலித்து ஏமாற்றியதாக புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்கை கிடப்பில் போட்ட நிலையில், பெண் வழக்கறிஞரான பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் பேரில் தற்போது வடபழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
13 பிரிவுகளின் கீழ் வடபழனி அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, விக்ரமனின் மீது பெண் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை மோசடி, அவதூறாக பேசுவது, மிரட்டுவது, மிரட்டி தொந்தரவு தருவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்குபதியப்பட்டுள்ளது.
பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின்படி விக்ரமன் பெண்மணியிடம் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கத்தை ஏற்படுத்தி, பின் அவரை காதலிப்பதாக நடித்து பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. மேலும், பெண்ணின் சாதியை குறிப்பிட்டு தாழ்வாக பேசியதும் உறுதியானது.
படிப்புக்காக பெண்மணிக்கு கிடைத்த பணத்தில் ரூ.13 இலட்சம் பணத்தை வாங்கிவிட்டு விக்ரமன் ஏமாற்றி இருக்கிறார். காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதும் உறுதியானது. விசிக சார்பில் விசாரணை செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ள பலன் இல்லை.
இதனிடையே, பெண்மணி நீதிமன்றத்தின் வாயிலாக விக்ரமனுக்கு எதிராக புகார் வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளார். இதனால் காவல் துறையினர் மேற்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்கில் முக்கியமாக பாலியல் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை (PCR) புகார்களும் இடம்பெற்றுள்ளதால், விரைவில் விக்ரமன் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.