மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளையாட்டுத்துறையில் சிங்கப்பெண்களை ஊக்குவித்து, விடியலை தந்த கதிர் ஆனந்த்; மண்ணின் மைந்தர்கள் நெகிழ்ச்சி.!
தங்களின் வாழ்க்கை முன்னேற உதவிய கதிர் ஆனந்த் சாருக்கு வாழ்த்துக்கள் என கபடி வீராங்கனைகள் குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி வேட்பாளராக களமிறங்கியுள்ள கதிர் ஆனந்த் (Kathir Anand), கடந்த தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவினால் வெற்றிபெற்று தொகுதியாக பல நன்மைகளை செய்திருந்தார். கே.வி குப்பம் பகுதியில் ஒன்றிய அரசு அமைத்த சுங்கச்சாவடியை மக்கள் போராட்டத்திற்கு தலைமைதாங்கி ஒற்றை ஆளாய் எதிர்த்து அதனை அகற்றியது, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தது, தனது தொகுக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதியில் கட்சி பேதமின்றி நலப்பணிகள் செய்தது என தான் செய்த மக்கள் பணிகளை எடுத்துரைத்து தொடர்ந்து மக்களிடம் வாக்குகளை சேகரித்து வரும் கதிர் ஆனந்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பை அளிக்கின்றனர்.
அதேவேளையில், இந்த தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள ஏசி சண்முகமும், இறுதிக்கட்ட நேரத்தில் மக்களின் செல்வாக்கை பெறுவதற்கு மருத்துவ முகாம் என களமிறங்கி வேலூர் களத்தை பரபரப்பாகி இருக்கிறார். நான் வந்தால் இதுவெல்லாம் செய்வேன் என்று கூறுவதை விட, தான் பணியில் இருந்த காலத்தில் செய்த நற்பணிகளை கூறி வாக்கு சேகரிக்கும் கதிர் ஆனந்துக்கு கிடைக்கும் வரவேற்பால் களத்தில் போட்டி கடுமையாகி இருக்கிறது. இவ்வாறான தருணத்தில் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களால் பலன்பெற்ற பலரும் தாமாக முன்வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மக்களவை தொகுதி, பேர்ணாம்பட்டு, எரிக்குத்தி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் சஞ்சய் காந்தி அவர்களால் உருவாக்கப்பட்ட பெண்கள் கபடி அணியின் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சஞ்சய் காந்தி தெரிவிக்கையில், பெண்களை தலைமையாக கொண்டு அணியை உருவாக்கியபோது, தான் எதிர்கொண்ட பல்வேறு நிதி சார்ந்த பிரச்சனைகளுக்கு எம்.பி நேரடியாக தலையிட்டு அதனை நிறைவேற்றி தந்ததாக கூறினார். மேலும், எந்த போட்டிக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த போட்டி நடத்த வேண்டும் என்றாலும் எம்.பி அதற்கான முழு செலவையும் ஏற்று, பல சாதனை நாயகர்களை உருவாக்கி இருக்கிறார். எம்.பி கதிர் ஆனந்தின் உதவியால் வீராங்கனை சத்தியவாணி அகில இந்திய பல்கலை அளவில் 4 பதக்கம், 1 கேலோ இந்தியா பதக்கம், 3 தேசிய அளவிலான கபடி போட்டி ஆகியவற்றில் பங்கேற்று வெற்றிகண்டு இருக்கிறார். இதோடு மட்டுமல்லாது கல்விக்கும் கதிர் உதவி செய்துள்ளார். இவ்வாறான நன்மையை செய்து தங்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவிய கதிர் ஆனந்துக்குத்தான் எங்களின் வாக்குகள் என சிங்கப்பெண்கள் தங்களின் உறுதியை அளித்து வெளியிட்டுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
எம்பேரு சத்தியவாணி, ஏரிக்குத்தி கிராமம், வேலூர் மாவட்டத்துல பொறந்து நான் இன்னிக்கி 4 All India University, 1 Khelo India, 3 Nationals கபடி competition விளையாடியிருக்கேன்!! 🔥
— KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் (@dmkathiranand) April 12, 2024
எங்கள் தொகுதியின் சிங்கப் பெண்கள்!!🙏🏽
கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு என நமது இளைஞர்களை மேலேற்றி… pic.twitter.com/ghQ1HxwfAL