மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசவத்தில் அடுத்தடுத்து தாய், சேய் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் போராட்டம்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம், காங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மனைவி மகேஸ்வரி (வயது 30). தம்பதிகளுக்கு 5 வயதுடைய மகள் இருக்கும் நிலையில், மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து, காங்குப்பத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு தைராய்டு உட்பட சில பிரச்சனை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரி, கடந்த 29 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்படவே, குழந்தையும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, மகேஸ்வரியின் மாமனார் ஜெயக்குமார் தொடக்கத்தில் சிகிச்சை அளித்த காங்குப்பம் ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கும் மகேஸ்வரின் பரிசோதனை விபரத்தை கேட்டுள்ளார்.
அவர்கள் நாளை தருவதாக தெரிவித்த நிலையில், மனம் கேட்காத ஜெயக்குமார் உறவினர்களுடன் மருத்துவமனை வளாகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார். மேலும், மருத்துவர்களிடமும் வாக்குவாதம் செய்ய, தகவல் அறிந்த கே.வி குப்பம் காவல் துறையினர் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.