மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிப்பருவ ஈர்ப்பு.. இரயில் முன்பாய்ந்து 2-கே கிட் காதல் ஜோடி சாவு.. வேலூர் அருகே சம்பவம்.!
16 வயதில் பருவ ஈர்ப்பு காதல் வயப்பட்ட சிறுமியும், 18 வயது சிறுவனும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி குப்பம் சொன்னாங்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் சிறுமி திரிஷா (வயது 16). அங்குள்ள கீழ் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யஷ்வந்த் (வயது 18).
இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் பருவ ஈர்ப்பு காதல் மலர்ந்துள்ளது. இந்த பருவக்காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அறியாத வயதில் ஏற்பட்ட ஈர்ப்பை கூட உணராத இருவரும், நம்மை பெற்றோர்கள் பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் நேற்று இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. பின்னர், இருவரும் ஜோடியாக குடியாத்தம் காவனூர் இரயில் தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளது.
அப்போது, அவ்வழியாக சென்னையில் இருந்து ஏலகிரி செல்லும் அதிவிரைவு இரயில் வரவே, இரயில் முன் பயந்த சிறார் ஜோடி தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டது. இந்த விஷயம் தொடர்பாக இரயில் ஓட்டுநர் ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.