மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாயமான பாமக நிர்வாகி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.. தீவிர விசாரணையில் காவல்துறை.. குடியாத்தத்தில் அதிர்ச்சி.!
புதன்கிழமை மாயமான பாமக பிரமுகர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கூடநகரம் ஊராட்சி பார்வதியாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஏகாம்பரம். இவரின் மகன் ஆகாஷ் குமார் (வயது 23). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார்.
கடந்த புதன்கிழமை இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. நண்பர்களிடம் விசாரித்தும் தகவல் இல்லை என்பதால், குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், பார்வதியாபுரம் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் ஆகாஷின் செருப்பு கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் மக்கள் தீயணைப்பு-மீட்பு படையினருக்கும் & காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிணற்றில் இறங்கி சோதனை செய்கியில், ஆகாஷ் குமாரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பாமக நிர்வாகி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.