"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
வேலூர் மாவட்டத்தை குளிர்வித்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!
மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கிய கடுமையான வெயில், தற்போது தமிழ்நாடு மக்களை வாட்டிவதைத்து வருகிறது. பல இடங்களில் 40 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகிறது.
இதனால் மக்கள் பலரும் வெப்பத்தின் தாக்கம் தீராது அதுசார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் பக்கம் மக்கள் திரும்பியாய்த்தால், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென வெப்பத்தை குறைக்க மழை பெய்தது. ஆலங்கட்டி மழையும் மக்களை மகிழ்வித்த காரணத்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆலங்கட்டிகளை கண்டு ரசித்தனர்.
இன்றைய நாளில் அம்மாவட்டத்தில் பரவலாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Watch | வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை 🌧️
— Sun News (@sunnewstamil) May 2, 2024
வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள்… pic.twitter.com/wVOANSvnee