#Breaking || தமிழ்நாட்டை உலுக்கிய வேங்கைவயல் விவகாரம் - சிறார்கள் பெற்றோருடன் ஆஜர்.!!



Vengai vayal issues pudukotai court order

புதுக்கோட்டையின், இறையூர் வேங்கைவயல் என்னும் கிராமத்தில் கடந்த  டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று பட்டியல் இன சமூக மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்துள்ளது என்று தகவல் வந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். பின்னர் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில்  2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

பின்னர், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்படி கடந்த ஐந்து மாத காலமாக சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர்  மற்றும் முத்துக்காடு போன்ற பகுதியிலுள்ள நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்த நிலையில், 8 நபர்களை தீவிரமாக விசாரணை செய்ய தொடங்கிய நிலையில். DNA மூலம் அந்த மலம் கலந்தவரை பிடிக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 

இந்த நிலையில், தொடர்ந்து DNA டெஸ்டுக்கு மறுப்பு தெரிவித்து வந்த எட்டு பேருக்கும் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து, 8 பேரின் ரத்த மாதிரிகளை தர உத்தரவு பிறப்பித்திருந்தது.

4 சிறார்களிடம் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  பெற்றோருடன் ஆஜர்.